முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,107 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 10,107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
மகாராஷ்டிரத்தில் மேலும் 10,107 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 10,107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,107 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,34,880ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 237 பேர் பலியானார்கள்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,15,390ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 10,567 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,79,746ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,36,661 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →