அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 
இந்தியா

கரோனா தாக்கம் குறைந்தவுடன் கோவில்கள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்தவுடன் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

DIN


மதுரை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்தவுடன் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு பணியில் அமைச்சர் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் தடையின்றி நடைபெறுகின்றது என்று அமைச்சர் சேகர்பாபு அவர் தெரிவித்தார்.

கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது கோவில் யானை பார்வதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு பணிக்காக வந்துள்ள அமைச்சர் சேகர்பாபு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர்,  கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது கோவில் யானை பார்வதியின் உடல்நிலை குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு - முழுவிவரம்!

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

SCROLL FOR NEXT