முகப்பு
இந்தியா

சீக்கியரே பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்: கேஜரிவால்

பஞ்சாபில் சீக்கியரே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகார் குன்வர் விஜய் பிரதாப் சிங் உள்ளிட்டோருடன் கேஜரிவால்
பகிர்:


பஞ்சாபில் சீக்கியரே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார்.

பஞ்சாபில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால் கூறியது:

"ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் சீக்கியராகத்தான் இருப்பார். இது சீக்கியர்களின் உரிமை. முதல்வர் முகம் குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். ஆனால், யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை எண்ணி பஞ்சாப் பெருமை கொள்ளும்."

முன்னதாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் திங்கள்கிழமை ஆம் ஆத்மியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

2017 தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

முழு கட்டுரையைப் படிக்க →