முகப்பு
இந்தியா

அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்களுடன் சரத் பவார் நாளை ஆலோசனை

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுடன் தில்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
கோப்புப்படம்
பகிர்:


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுடன் தில்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். 

இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"கட்சித் தலைவர் சரத் பவார் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு தில்லியிலுள்ள இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்துகிறார். நாட்டில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த சமூகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்."

கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள்: 

யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி. ராஜா, பரூக் அப்துல்லா, ஏ.பி. சிங், ஜாவேத் அக்தர், கேடிஎஸ் துளசி, கரண் தாப்பர், அசுதோஷ், வழக்கறிஞர் மஜீத் மேமன், வந்தனா சாவண் எம்பி, எஸ்ஒய் குரேஷி (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்), கேசி சிங், சஞ்சய் ஜா, சுதீந்திர குல்கர்னி, காலின் கொன்சால்வெஸ், அருண் குமார் (பொருளாதார நிபுணர்), கன்ஷியாம் திவாரி மற்றும் பிரதீஷ் நந்தி.

நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைப்பது குறித்த பேச்சுகள் நிலவி வரும் சூழலில் சரத் பவாரின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, தேர்தல் உத்திகளை வகுக்கும் பிரசாந்த் கிஷோரை சரத் பவார் கடந்த 11-ம் தேதியும் இன்றும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →