மிசோரத்தில் புதிதாக கரோனா பாதித்த 430 பேரில் 103 பேர் இவர்களாம் 
இந்தியா

மிசோரத்தில் புதிதாக கரோனா பாதித்த 430 பேரில் 103 பேர் சிறைக்கைதிகள்

மிசோரம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 103 பேர் சிறைக் கைதிகள் என்பது தெரிய வந்துள்ளது.

PTI


ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 103 பேர் சிறைக் கைதிகள் என்பது தெரிய வந்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்ட சிறைக் கைதிகள் அனைவரும் ஐஸ்வாலில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மிசோரத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 10.82 சதவீதமாக உள்ளது.

21-ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 528 பேரில் பெரும்பாலானோர் ஆதரவற்றோர் மற்றும் மறுவாழ்வு மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவயுக ராதை... பாப்ரி கோஷ்!

எல்லா பட்டமும் நல்லா இருக்கு! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

தேவி தரிசனம்... ஹிமா பிந்து!

பராசக்தியில் அப்பாஸ்!

தேவதை பார்க்கும் நேரம்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT