மேற்கு வங்கம்: கரோனா 3-வது அலையை கண்காணிக்கக் குழு அமைப்பு
மேற்கு வங்கத்தில் கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 10 பேர் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 10 பேர் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
நாட்டில் கரோனா 3-வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளது.
கரோனா மூன்றாவது அலை கண்டறியப்பட்டால், அவற்றை ஆரம்பம் முதலே கண்காணித்து மேலாண்மை செய்யும் பணியை இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.
மேற்கு வங்கத்தில் 22,508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.