கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம்
கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதால் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதால் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவேக்சின் தடுப்பூசியை சில வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு காணும் வகையில் சுகாதாரத் துறை செயலருக்கு கடிதம் எழுத தலைமைச் செயலருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த சிக்கலில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது கடிதத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் வெளிநாடு செல்ல எத்தகைய சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.