முகப்பு
இந்தியா

‘மாஞ்சா’ நூல் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை

பட்டம் விடுவதற்கான ‘மாஞ்சா’ நூலை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பட்டம் விடுவதற்கான ‘மாஞ்சா’ நூலை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, ஆடுகோடியில் புதன்கிழமை ஒருவா் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த மாஞ்சா நூல் சிக்கிக் கொண்டதில், அவரது கழுத்து, கை விரல்களில் காயமேற்பட்டுள்ளன. இதனையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மாஞ்சா நூலை இணைத்து பட்டம் விடுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாஞ்சா நூலை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 2016-ஆம் ஆண்டில் மாநிலத்தில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சிலா் அந்த நூலை பயன்படுத்தி பட்டம் விட்டு வருகின்றனா். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.