இந்தியா

8 மாநிலங்களில் 50 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் குறைந்து வருவதையடுத்து, இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

நாட்டின் தற்போதைய குணமடைவோர் விகிதம் 96.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தின் நான்காவது வாரத்தில் 531 மாவட்டங்களில் 100க்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

ஜூன் 2வது வாரத்தில் 262 மாவட்டங்களில் பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 125 மாவட்டங்களில் மட்டுமே 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆந்திரம், தில்லி, ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் டெல்டா வகை கரோனாவால் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் பிரிட்டனில் உருமாறிய கரோனா கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 4 வகையான உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

அதில், டெல்டா வகை கரோனா இந்திய ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் டெல்டா வகை கரோனாவை கண்டறிந்து உறுதி செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT