கட்டாய மத மாற்றத்திற்காக 2 சீக்கிய பெண்கள் கடத்தல்: ஜம்மு-காஷ்மீரில் போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்த சம்பவத்தைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்த சம்பவத்தைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக இரு பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டங்கள் வலுவாக்கப்பட்டுள்ளதைப் போன்று யூனியன் பிரதேசங்களிலும் சட்டங்களை வலுவாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.
மேலும், தலைநகர் ஜம்மு-காஷ்மீரில் கண்டனப் பேரணியில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.