முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் காவல்துறை அதிகாரியின் குழந்தையும் பலி

சிறப்பு காவல்துறை அதிகாரி, அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்த நிலையில், அவர்களது குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி பலியானதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜூன், 2021 at 12:18 PM
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் காவல்துறை அதிகாரியின் குழந்தையும் பலி
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் சிறப்பு காவல்துறை அதிகாரி, அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்த நிலையில், அவர்களது குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி பலியானதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அவந்திபோராவில் உள்ள ஹரிபரிகாம் பகுதியில் உள்ள சிறப்பு காவல்துறை அதிகாரி ஃபயாஸ் அகமது வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் காயமடைந்த ஃபயாஸ் அகமது, அவரது மனைவி ராஜா பேகம், அவா்களின் மகள் ரஃபியா ஆகியோா் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 

அங்கு ஃபயாஸ் அகமது, ராஜா பேகம் ஆகியோா் உயிரிழந்தனா். ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரஃபியாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ரஃபியாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா்’’ என்று தெரிவித்தனா்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.