முகப்பு
இந்தியா

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள்: ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.