உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை 
இந்தியா

ஜம்மு விமானப்படைத் தளத்தில் தாக்குதல்: உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை

ஜம்மு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

DIN

ஜம்மு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், லாடகிற்கு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், லடாகில் உள்ள நிலவரம் குறித்தும் விவரிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: பினராயி விஜயன் வாக்களித்தார்!

அமித் ஷா கைகள் நடுங்கின; என் சவாலை அவர் ஏற்கவில்லை! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT