கேரள சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம்
கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபியாக அனில் காந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபியாக அனில் காந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு டிஜிபியாக இருந்த லோகநாத் பெஹ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1988-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அனில் காந்த் தெற்கு கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்து வந்தார்.
சுரேஷ் குமார், பி.சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையியல் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அனில் காந்தை டிஜிபியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.