நாகலாந்தில் ஆயுதப்படைச் சட்டம்: மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு
நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கடந்தாண்டு டிச. 31ஆம் தேதி அமல்படுத்தியது.
இந்த உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 6 மாத காலம் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Advertisement
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.