'ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொள்.. செருப்பால் அடித்துவிடு': பஞ்சாயத்துத் தீர்ப்பு 
இந்தியா

'ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொள்.. செருப்பால் அடித்துவிடு': பஞ்சாயத்துத் தீர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணிடம், குற்றவாளியை 5 முறை செருப்பால் அடித்துவிட்டு, ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொள் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்

DIN

கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணிடம், குற்றவாளியை 5 முறை செருப்பால் அடித்துவிட்டு, ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொள் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில்(?) சமாதானம் அடையாத சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

கோதிபார் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட இடத்தில் வசித்து வரும் சிறுமியின் தாய், இந்த சம்பவம் குறித்து ஜூன் 23-ஆம் தேதி கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாயத்தில், இரு தரப்பினரையும் விசாரித்து, பஞ்சாயத்தார் முன்னிலையில், பலாத்காரம் செய்தவரை ஐந்து முறை செருப்பால் அடித்துவிட்டு, ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு சிறுமிக்கு தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாகப் பரவிய நிலையில், மகாராஜ்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குப்தா, நேராக அந்த கிராமத்துக்குச் சென்று, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தி, அவரிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் நிரூபிக்கப்பட்டால், வழக்குப் பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதீப் குப்தா உறுதியளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT