மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,397 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,397 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,397 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 5,754 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 30 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,61,467 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,30,458 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,184 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி இன்னும் 77,618 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 93.94 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.41 சதவிகிதமாக உள்ளது.