முகப்பு
உலகம்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நேபாள முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரை விடுவிக்க உத்தரவு....

Updated On : 6 ஏப்ரல், 2026 at 4:20 PM
கே. பி. சர்மா ஓலி
பகிர்:

நேபாளத்தில் நடைபெற்ற ஜென் ஸீ இளையோர் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஒடுக்குமுறையைக் கையாண்டதாக எழுந்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட நேபாள முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 28-இல் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் விடுவிக்க அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வரும் வியாழக்கிழமை வரை நீதிமன்ற காவலில் உள்ள அவர்கள் இருவர் மீதான புகார்களை விரைந்து விசாரித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது நீதிமன்ற காவல் முடியும் நாளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

The Supreme Court of Nepal has ordered the release of former Nepal Prime Minister KP Sharma Oli and former Home Minister Ramesh Lekhak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments