முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: விதான் பவனுக்கு சைக்கிள் பேரணி மேற்கொண்ட காங். எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர். 

Updated On : 1 மார்ச், 2021 at 4:38 PM
Cong MLAs take out bicycle rally to Maharashtra Vidhan Bhavan
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர். 

இந்த பேரணியில், மகாராஷ்டிரத்தின் அமைச்சர்கள் பாலாசாகேப் தோரத், அஸ்லம் ஷேக் மற்றும் யஷோமதி தாக்கூர் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். 

மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய படோல், 

Advertisement

மக்களைக் கேலி செய்வதாகவும், எரிபொருள் அதிகரிப்பால் சாமானியர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் படோல் குற்றம் சாட்டியுள்ளார். 

ஏற்கெனவே, பெட்ரோல் விலை உயர்வால், ஏழை மக்களின்  வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இதில் எரிபொருள் தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.