இந்தியா

நாட்டில் புதிதாக 12,286 பேருக்கு கரோனா, 91 பேர் பலி

ANI

புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 12,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த 91 பேர் பலியாகினர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,24,527-ஆக அதிகரித்தது. 

அதுபோல நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 91 பேர் உயிரிழந்தனா். இதனால் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,248 ஆக உயர்ந்தது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 12,464 பேர் குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,98,921 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 1,68,358 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

திங்கள்கிழமை மாலை வரையிலும் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 54 ஆயிரத்து 136 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT