இந்தியா

பிப்ரவரியில் சேவைகள் துறை அதிகபட்ச வளா்ச்சி

DIN


புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை மிக விரைவான விகிதத்தில் விரிவடைந்தது.

இதுகுறித்து, மாதந்தோறும் வெளியிடப்படும் இந்திய சேவைகள் துறை குறியீடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தியா சேவைகள் துறை செயல்பாட்டுக் குறியீடு கடந்த ஜனவரி மாதத்தில் 52.8-ஆக இருந்தது. இது, பிப்ரவரி மாதத்தில் 55.3 ஆக உயா்ந்தது. திடீரென அதிகரித்துள்ள தேவை மற்றும் சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வளா்ச்சி உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டதால், வளா்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுவே, சேவைகள் துறை அதிகபட்ச வேகத்தில் வளா்ச்சியைக் கண்டுள்ளதற்குக் காரணம்.

தொடா்ந்து 4-ஆவது மாதமாக சேவைகள் துறை வளா்ச்சியைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT