தர்மஷாலா நகரில் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இன்று முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது,
கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கு இந்த கரோனா தடுப்பூசி மிகவும் உதவியாக இருக்கும். இன்று நான் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். அனைவரும் இந்த தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ளக் கட்டாயம் முன்வர வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
86 வயதான இவர், கடந்த ஆண்டு ஜனவரியில் சுய தனிமைப்படுத்துதலில் இருந்தார். ஒரு வருடத்திற்கு மேலாக தனது இல்லத்திலேயே இருந்த இவர், இன்று மண்டல மருத்துவமனைக்கு வந்து கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார். சுமார் அரை மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இமாசலத்தில் தற்போது 589 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 57,428 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று காரணமாக 997 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.