முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 286 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் புதிதாக 286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து இரண்டு நாள்களாக தலா 300-க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவான நிலையில் ஞாயிற்றுக்கிழமை 300-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

Advertisement

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் சனிக்கிழமை 60 சதவிகிதமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 31 சதவிகிதமாக உள்ளது. 

ஞாயிறு மட்டும் 91,614 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 1,803 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments