இந்தியா

தில்லியில்தான் மாற்றம் ஏற்படும், வங்கத்தில் அல்ல: மம்தா

DIN


தில்லியில்தான் மாற்றம் ஏற்படும், மேற்கு வங்கத்தில் மாற்றம் ஏற்படாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார்.

அப்போது அவர் பேசியது:

"சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து அதிகரித்து மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது. பெண்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரியை நீக்கி அவர்களது சுமையைக் குறைக்க அரசு ஆர்வம் காட்டாதது வெறுப்படையச் செய்கிறது. 

மாற்றம் தில்லியில்தான் ஏற்படும், மேற்கு வங்கத்தில் ஏற்படாது. 

மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என பிரதமர் மோடி கூறினார். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களைப் பாருங்கள். பெண்களால் 3 மணிக்கு மேல் வெளியே வர முடியாது. மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT