தில்லியில் புதிதாக 320 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளது. புதிதாக 320 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,41,660 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 234 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 6,28,920 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,928 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 1,812 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.