மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,927 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,38,398 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 12,182 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 56 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 52,556 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 20,89,294 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 95,322 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.