முகப்பு
இந்தியா

கரோனா சான்றிதழில் மோசடி செய்த மும்பை தம்பதி கைது

கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்களில்தான் இதுவரை மோசடிகள் செய்யப்பட்டு வந்தது. தற்போது கரோனா சான்றிதழிலும் கூட மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கரோனா சான்றிதழில் மோசடி செய்த மும்பை தம்பதி கைது
பகிர்:

கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்களில்தான் இதுவரை மோசடிகள் செய்யப்பட்டு வந்தது. தற்போது கரோனா சான்றிதழிலும் கூட மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மும்பையில் ஒரு தம்பதி, தங்களது மகள் உள்பட மூவரின் கரோனா பரிசோதனை சான்றிதழில் மோசடி செய்து ஜெய்ப்பூர் செல்ல முயன்றது தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கரோனா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், லஷ்மிசந்த், தவானி (53), மனைவி லீனா தவானி (51) மகள் தியா தவானி ஆகியோர் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரில், பிப்ரவரி 26-ஆம் தேதி மூவரும் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில், அவர்கள் மூவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மூவரும் அந்த சான்றிதழில் திருத்தம் செய்து அதனை செல்லிடப்பேசியில் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த மருத்துவர் ஓம்பிரகாஷ் ஜெய்ஸ்வால், இதில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்ததும், அவர்களுக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அப்போது அவர்கள் மூவரும் மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்கு விமானத்தில் செல்ல கிளம்பிவிட்டதாகக் கூறிவிட்டனர்.

ஆனால், ஆரோக்கிய சேது செயலி மூலம், விமான நிலைய அதிகாரிகள், அவர்கள் மூவருக்கும் கரோனா இருப்பது உறுதியானதை அறிந்து கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தி கரோனா நோயாளிகளுக்கான முகாமுக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →