முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 15,817 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,817 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 15,817 பேருக்கு கரோனா
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,817 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,817 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,82,191ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 56 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 52,723ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11344 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 21,17744ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 1,10,485பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →