கேரளத்தில் மேலும் 1780 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1780 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1780 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 1780 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10,87444ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 14 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,369ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 3,377 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,50603ஆக உள்ளது. தற்போது 32174 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.