கரோனா: உள்ளாட்சிகள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சுகாதாரக் குழுவினரை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மத்திய குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, பள்ளி, கல்லூரி, வணிக வளாகம், கேளிக்கை அரங்கம் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.