பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: அங்கன்வாடி மையங்கள் மூடல்
பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் சில மாநிலங்களில் அதன் பரவல் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேரப் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை மூட மாநில சமூகபாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அருணா செளத்ரி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
Advertisement
குழந்தைகளுக்கான ரேஷன் மற்றும் பிற பொருட்கள் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் வீடு தேடி தொடர்ந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ள அருணா செளத்ரி முகக்கவசம் அணுவது, கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற சுகாதார நெறிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.