கேரளத்தில் 4 சதவிகிதத்துக்கும் கீழ் கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம்
கேரளத்தில் புதிதாக 2,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் புதிதாக 2,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷகிலா வெளியிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 58,344 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 2,035 மாதிரிகளில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4 சதவிகிதத்துக்கும் கீழ் நீடித்து வருகிறது.
மேலும் 3,256 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 10,53,859 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,381 பேர் பலியாகியுள்ளனர்.