முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 16,620 பேருக்கு கரோனா; 50 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 16,620 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 16,620 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,620 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,14,413ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 50 பேர் பலியானார்கள். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 52,861ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,26,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கரோனாவிலிருந்து இன்று 8,861 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 21,34,072ஆக உயர்ந்துள்ளது. 5,83,713 வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments