முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஒருநாள் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் ஒருநாளில் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
மகாராஷ்டிரம், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஒருநாள் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
பகிர்:

புது தில்லி:  மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் ஒருநாளில் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 26,291 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.41 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டித்தில் அதிகபட்சமாக 16,620 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் 1,792 பேருக்கும், பஞ்சாப்பில் 1,492 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,19,262. மற்றொருபுறம், இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது. இன்று காலை 7 மணி வரை 2,99,08,038 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82,92,193 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Advertisement

58வது நாளான நேற்று 1,40,880 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,10,07,352-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.68 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 17,455 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments