நாக்பூரில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு
நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளிப் பயணங்களைத் பொதுமக்கள் தவிா்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாக்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,252 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவிலிருந்து 1,033 பேர் மீண்ட நிலையில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி நாக்பூரில் 16,630 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.