முகப்பு
இந்தியா

அருணாசலில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை

அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 15,000 என்ற அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 
இதனால் மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 3 பேர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 16,781 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,10,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
அதில் நேற்று மட்டும் 108 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments