முகப்பு
இந்தியா

கரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

கரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில தினங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

Advertisement

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments