இந்தியா

இங்கு இதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால்..: பிரதமர் மோடி எச்சரிக்கை

DIN

கரோனா தொற்றுப் பரவலை இப்போது உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், நாடு முழுவதும் கரோனா பரவல் மோசமடையலாம் என்று பிரதமர் நரேந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுமார் 70 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது.

ஒரு வேளை, இங்கு இதை உடனடியாக நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், இது நாடு முழுவதும் பரவி மீண்டும் கரோனா பேரிடரை ஏற்படுத்தலாம், எனவே, உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை எழுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மேலும், கரோனா பேரிடரைக் கையாள்வதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருந்துள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து  வருவது, நாட்டில் கரோனா இரண்டாவது அலை வீசக்கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மோடி பேசுகையில், மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றாலும், இந்த சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT