அதிகரிக்கும் கரோனா: மகாராஷ்டிரத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஆரம்பம் முதலே அதிகரித்த வண்ணம் உள்ளது. மீண்டும் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
Advertisement
அதன்படி திரையங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50% பணியார்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.