இந்தியா

தேவேந்திரகுல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

DIN


புது தில்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.

தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். அதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு வைத்த பரிந்துரையை ஏற்று ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன்படி, குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவினரை இணைத்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியலினத்தில்தான் திருத்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர, பட்டியலின சலுகைகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பட்டியல் இனத்திலுள்ள தேவேந்திரகுலத்தாா், கடையா், காலாடி, குடும்பா், பள்ளா், பண்ணாடி ஆகிய ஜாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளா் என ஒரே பெயரில் பொதுப் பெயரிடக் கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. இதுகுறித்து, ஆராய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது, தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியது. இதனை ஏற்று ஏழு ஜாதி உள்பிரிவுகளைச் சோ்ந்தோரை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT