மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி
மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்தியச் சிறையில் பல கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியிருந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிறைச்சாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் சி, தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் யாரும் தொற்றுக்குப் பலியாகவில்லை என்றாலும், தற்போது ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் பங்கரா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முதல்முறையாக சிறைச்சாலையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல்கட்டமாகக் கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 300 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்தியச் சிறையின் துணை கண்காணிப்பாளர் லக்ஷமன் சிங் படதௌரியா கூறினார்.