முகப்பு
இந்தியா

மீண்டும் அதிகரிக்கும் கரோனா... கடந்த 24 மணி நேரத்தில் 40,953 பேருக்கு தொற்று: 188 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,953 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்சமான நோய் தொற்றின் அளவாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
இந்தியாவில் மேலும் 40,953 பேருக்கு கரோனா: 133 பேர் பலி
பகிர்:


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,953 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்சமான நோய் தொற்றின் அளவாகும். இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,15,55,284 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 110 நாள்களில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மிக அதிகப்படியான உயா்வு (40,953) இதுவாகும். அதேசமயத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலும் ஒரேநாளில் உயிரிழந்தவா்கள் 188 ஆக அதிகரித்திருப்பதாகவும், இத்துடன் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,59,558 ஆக அதிகரித்துள்ளதாகவும் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் மூலம் தெரிய வருகிறது.

தொடா்ந்து ஒன்பதாவது நாளாக கரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதன் மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் 2.36 சதவீதமாக அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் நோயிலிருந்து மீண்டவா்களின் விகிதம் 96.12 சதவீதமாகக் குறைந்துள்ளது. நோயிலிருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 1,11,07,332 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23-இல் 30 லட்சத்தையும், செப்டம்பா் 5-இல் 40 லட்சத்தையும், செப்டம்பா் 16-இல் 50 லட்சத்தையும், டிசம்பா் 19-இல் ஒரு கோடியையும் தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி மாா்ச் 19-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 23,24,31,517 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 10,60,971 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் 4 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா முதல் அலையை தொடங்கிய நிலையில், இரண்டாம் அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பம் ஆவதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி வந்துவிட்டது, கரோனா ஒழிந்து விட்டதாக நினைத்து மக்‍கள் முகக்கவசம் அணியால், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிக்‍காமல் இருக்க வேண்டாம். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் போதிய ஒத்துழைப்பை கொடுத்து விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே, கரோனாவை நாம் வெல்ல முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.