ம.பி.யில் ஒருநாள் ஊரடங்கு அமலானது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், போபால், இந்தூர், ஜாபல்பூர் மாவட்டங்களில் வாரமொருநாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று (மார்ச் 21) முதல் வாரமொருநாள் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் விடுமுறை நாள்களில் மக்கள் அதிகம் கூடும் சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.