முகப்பு
பிரதமர் மோடி
இந்தியா

ஊழலின் முந்தைய பதிவுகளை முறியடித்து வருகிறது திரிணமூல் அரசு: பிரதமர் மோடி

ஊழல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான முந்தைய பதிவுகள் அனைத்தையும் திரிணமூல் காங்கிரஸ் முறியடித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பிரதமர் மோடி
பகிர்:

ஊழல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான முந்தைய பதிவுகள் அனைத்தையும் திரிணமூல் காங்கிரஸ் முறியடித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

காங்கிரஸ், இடதுசாரி கட்சிளுக்கு மேற்குவங்க மக்கள் 70 ஆண்டுகளை வழங்கியுள்ளனர். ஆனால், இந்த கட்சிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. மாறாக,  துன்புறுத்தல் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து முந்தைய பதிவுகளையும் திரிணமூல் உடைத்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சனிக்கிழமையன்று கரக்பூரில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'மத்திய அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே மேற்குவங்க அரசை மம்தா பறித்துள்ளார். ஏனெனில், இந்த திட்டங்களுக்கான பெயர் எனக்கு கிடைத்துவிடுமே என்று அவர் அஞ்சுவதாலே மக்களின் திட்டங்களை தடுத்து வருகிறார்' என்றார். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.  வாக்குகளின் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்

முழு கட்டுரையைப் படிக்க →