மேற்குவங்கம்: 13 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மேற்குவங்கத்தில் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
டார்ஜிலிங்கில் நீரஜ் தமாங் ஜிம்பா, கலிம்போங் தோகுத்தியில் சுபா பிரதான், குர்சியோங் தொகுதியில் இருந்து பிஷ்ணு பிரசாத் சர்மா, கரந்திகி தொகுதியில் சுபாஷ் சிங்கா, இட்டாஹாரில் அமித் குமார் குண்டு, பாக்தாவில் பிஸ்வஜித் தாஸ், போங்கான் உத்தர் தொகுதியில் அசோக் கிரிதோனியா, கெய்கட்டா தொகுதியிலிருந்து சுப்ரதா தாகூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பொருளாதார வல்லுனர் அசோக் லஹிரி பாஜக சார்பில் பலூர்காட் தொகுதியில் போட்டியிடுகிறார். முந்தைய தேர்தலில் இவர் அலிபுர்தார் தொகுதியில் போட்டியிட்டார்.
மாநிலத்தில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது கட்டத் தேர்தலில் இந்தத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.