இந்தியா

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வாய்ப்பில்லை: பாஜக எம்.பி

DIN

அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வாய்ப்ப்பில்லை என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி "அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர முடியாது” என்றார்.

மேலும் பெட்ரோல் டீசல் மீது 28% வரியை வசூலித்தால் ஆண்டுக்கு ரூ .2 லட்சம் கோடி முதல் 2.5 லட்சம் கோடி வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படும்

தற்போது, ​​பெட்ரோலிய பொருட்களுக்கு 60 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசுக்கு மட்டுமே நாட்டில் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவதற்கான தைரியம் உள்ளது என்று சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது போடப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT