முகப்பு
இந்தியா

6 மாநிலங்களில் நாட்டின் 80.63% கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மொத்த கரோனாவில் 6 மாநிலங்களில் மட்டும் 80.63 சதவிகித கரோனா பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மொத்த கரோனாவில் 6 மாநிலங்களில் மட்டும் 80.63 சதவிகித கரோனா பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எனினும் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 53,476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement

இதில் 6 மாநிலங்களில் மட்டும் 80.63 சதவிகிதம் கரோனா பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், பஞ்சாப், கேரளம், கர்நாடகம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் பதிவாகும் கரோனா அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments