முகப்பு
இந்தியா

மருத்துவப் படிப்பு: புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு

மருத்துவப் படிப்பில் புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீடு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
உயர்நீதிமன்றம்
பகிர்:

மருத்துவப் படிப்பில் புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீடு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

புதுச்சேரி அமைச்சரவை மூலம் கொண்டுவரப்பட்ட பரிந்துரையை நிராகரித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது போன்று புதுச்சேரியில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது.

எனினும், 10 சதவிகித இடஒதுக்கீடை ஏற்காத துணைநிலை ஆளுநர் புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.

இதனிடையே அந்த பரிந்துரையை நிராகரித்ததாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பில் புதுச்சேரி அரசுகொண்டுவந்த 10 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் தகுதியான மற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.