முகப்பு
ராஜஸ்தானில் ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் பலி
இந்தியா

ராஜஸ்தானில் ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் உயிரோடு எரிந்து பலியாகினர். 5 வீரர்கள் காயமடைந்தனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
ராஜஸ்தானில் ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் பலி
பகிர்:

கங்காநகர்: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் உயிரோடு எரிந்து பலியாகினர். 5 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் சூரத்கார் - சட்டர்கார் சாலையில் இந்த விபத்து நேரிட்டதாகவும், வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஜிப்ஸி வகை கார், சாலை வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 3 வீரர்கள் உயிரோடு எரிந்து பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →