அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
அதிர்ச்சி தகவலாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 22 புத்த துறவிகள் ஏப்ரல் 26ஆம் தேதி இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.110 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புத்த துறவிகள் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும், குஷ் மற்றும் ஐஸ் என்ற பயங்கர போதைப்பொருள்கள் இதுவென்றும் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
முதலில், புத்த துறவிகளின் உடைமைகள் மிக அதிகமாக இருந்துள்ளது. அதில், ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் அதிகமாக இருந்துள்ளன. ஆனால், சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, அனைத்து பெட்டிகளும் முழுமையாகத் திறக்கப்பட்டு சோதனை செய்தபோது, ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ரகசிய அறை இருந்ததும் அதில் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், புத்த துறவிகளின் பைகளில் ஒரு மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பைகளில் 5 கிலோ வரை பயங்கரமான போதைப்பொருளை வைத்திருந்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் இருந்த இளம் துறவிகள் என்றும், அங்கிருந்த தொழிலதிபர் ஒருவர், இவர்களை மூளைச்சலவை செய்து, தாய்லாந்துக்கு இலவசமாக சுற்றுலா அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் இவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். சில துறவிகளோ, சுற்றுலா சென்று வந்தோமே தவிர, இந்த போதைப்பொருள் கடத்தல் பற்றி தங்களுக்குத் தெரியாது என விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இது என்றும் தெரிவித்துள்ளனர்.
In shocking news, 22 Buddhist monks were arrested in Sri Lanka for drug trafficking.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.